மானாவாரி மக்காச்சோளம் சாகுபடியில்  மேக்சிம் உரத்தினை இலைவழியாக தெளித்தல்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தால் கண்டுப்பிடிக்கப்பட்ட மக்காச்சோளம் மேக்சிம் என்ற உரக்கலவை மக்காச்சோளத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கலந்த பூஸ்டராகும். இதனை பயிருக்கு அளிப்பதன் மூலம் மணி பிடிக்கும் திறன் அதிகரிக்கும்,விளைச்சல் 20 சதம் வரை கூடும் மற்றும் வறட்சியைத் தாங்கும் திறன் அதிகரிக்கும். இதனை ஒரு ஏக்கருக்கு 3 கிலோ நுண்உரக்கலவையினை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கதிர் வெளிவரும் போதும் அதன் பின் பால் பிடிக்கும் தருணத்திலும் பயிர் நன்கு நணையும் படி தெளிக்க வேண்டும். இதனால் நல்ல திரட்சியான சோள மணிகள் கிடைக்கும்.மேலும் பயிர் வறட்சியைத் தாங்கி வளரும்.

Content Files
Content Comments
Likes Dislikes
Comment Author Date
Be the first to post a comment...
Content Tags