மக்காச்சோள சாகுபடியில் அமெரிக்கப்படைப்புழுவின் ஆரம்ப கட்ட தாக்குதலில் இருந்து விடுபட ஒரு கிலோ மக்காச்சோள விதைக்கு சையான்ட்ரினிலிபுரோல் 19.8 சதம் தையாமீத்தாக்சாம் 19.8 சதம் என்ற பூச்சி மருந்து கலவையை 4 மில்லி கலந்து விதை நேர்த்தி செய்து விதைகளை விதைக்க வேண்டும். கடைசி உழவின் போது ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடவேண்டும். மேலும் பயிர் முளைத்த 15 முதல் 20 நாட்களில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 0.4 மில்லி குளோர்ஆன்ட்ரனிலிபுரோல் 18.5 SC அல்லது 0.4 மில்லி ஃப்ளுபென்டமைடு 480 SC ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தெளித்து படைப்புழுவின் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.