குறுவை பயிருக்கு மண் ஆய்வு செய்து அதில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள மணிச்சத்து முழுவதையும், தழை மற்றும் சாம்பல் சத்தில் கால் பங்கையும் அடியுரமாக இடவேண்டும். ஒரு ஏக்கர் நாற்றுகளை 150 மிலி திரவ அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியாவில் நனைத்து நட வேண்டும். நடவின் போது 200 மிலி திரவ அசோஸ்பைரில்லம் அல்லது பாஸ்போ பாக்டீரியாவை மண் அல்லது தொழு உரத்துடன் கலந்து நடவு வயலில் தெளிக்க வேண்டும். நடவு வயலில் கடைசி உழவுக்கு முன் 200 கிலோ ஜிப்சம் இட வேண்டும். மேலும், ஏக்கருக்கு 10 கிலோ ஜிங்க் சல்பேட் மணலுடன் கலந்து இட வேண்டும். குறுவைக்கு அடியுரமாக 44 கிலோ டிஏபி, யூரியா 25 கிலோ, பொட்டாஷ் 17 கிலோ இடவேண்டும். முதல் மேலுரம் 22 கிலோ யூரியா, இரண்டாம் மேலுரம் 22 கிலோ யூரியா, பொட்டாஷ் 17 கிலோ, மூன்றாம் மேலுரம் 22 கிலோ யூரியா இட வேண்டும் என தஞ்சை மாவட்டத்தின் வேளாண் இணை இயக்குநர் திரு.ந.க.நல்லமுத்துராஜா தெரிவித்துள்ளார்.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.